News October 25, 2024

பதவி விலகுவாரா உதயநிதி ஸ்டாலின்?

image

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதற்கு CM என்ன பதில் கூறப்போகிறார் என்றும், இதற்கு பொறுப்பேற்று உதயநிதி பதவி விலகுவாரா எனவும் கேள்வி எழுப்பினார். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பிரச்னையாக்கி அரசியல் செய்ததை தந்தையும், மகனும் இப்போதாவது உணர வேண்டும் எனச் சாடினார்.

Similar News

News January 15, 2026

பொங்கல் ஸ்பெஷல்: ‘தலைவர் 173’ UPDATE!

image

பொங்கலை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, ‘தலைவர் 173’ படம் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் அவர் கூறினார். ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் கமர்சியல் படமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம், கமல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

News January 15, 2026

விரைவில் கூட்டணி அறிவிப்பு: ராமதாஸ்

image

நேற்று தைலாபுரத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய ராமதாஸ், G.K.மணி, உள்ளிட்டோருடன் கூட்டணி குறித்து ஆலோசித்து இருக்கிறார். இதன்பின் அவர் பேசுகையில், கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்; யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் ராமதாஸ் தரப்பை இணைப்பதற்கு, பாஜக, அதிமுக தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

News January 15, 2026

வீல்சேரில் முடங்கிய பிரபல காமெடி நடிகர்!

image

தனது காமெடி டைமிங் & சிறப்பான நடிப்பால் மலையாள சினிமாவை கட்டியாண்ட ஜகதி ஸ்ரீகுமாரின் நிலை, நம்மை கலங்கச் செய்கிறது. 1500+ படங்களுக்கு மேல் நடித்துள்ளவரின் வாழ்க்கையை 2012-ல் நிகழ்ந்து கார் விபத்து புரட்டி போட்டு விட்டது. 5 தலைமுறைகளை கவர்ந்த அவர், இன்று பேசும் திறனை இழந்து, தற்போது வீல்சேரில் முடங்கியுள்ளார். மலையாளத்தில் உச்சம் தொட்டவர், தமிழில் ‘ஆடும் கூத்து’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

error: Content is protected !!