News April 5, 2025
மனம் மாறுவாரா டிரம்ப்? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு!

அமெரிக்கா விதித்த 26% வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. தவிர 10% அடிப்படை வரியும் அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. புதிய வரி விதிப்பு அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அதற்கேற்றபடி, அதிபர் டிரம்பும் இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு பேச்சுவார்த்தையை தீவிரமாக்கியுள்ளார்.
Similar News
News November 14, 2025
பிஹார் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: நயினார்

பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றிக்கு ECI உதவியதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அமைதியாக இருக்கும் காங்., தோல்வியடைந்தால் மட்டும் ECI-யை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 14, 2025
‘கும்கி 2’ படத்தை வெளியிட HC அனுமதி

பிரபு சாலமன் வாங்கிய கடனுக்காக ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை HC <<18267148>>இடைக்கால தடை<<>> விதித்திருந்தது. இந்நிலையில் பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே, வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட HC, ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி கொடுத்தது. அதேநேரம் ₹1 கோடியை கோர்ட்டில் செலுத்த பிரபு சாலமனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
20 ஆண்டுகளில் RJD சந்தித்த பெருந்தோல்வி

பிஹாரில் மிக சக்திவாய்ந்த அரசியல் கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), 2005-க்கு பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2005-ல் ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு அலையில் நிதிஷ்-பாஜக கூட்டணி வென்றது. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிதிஷ் – பாஜக கூட்டணி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான RJD-யை வீழ்த்தி ஆட்சியை தக்க வைத்துள்ளது. RJD தற்போது 24 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.


