News August 18, 2024
இனி இதுவும் தீவிரவாதமாகக் கருதப்படும்?

பெண்களுக்கு எதிரான பாலாதிக்க வன்முறைகளை தீவிரவாதத்தின் ஒரு வடிவமாகக் கருத இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்கள், பணியிடங்கள் & ஆன்லைனில் சிறுமிகள் & பெண்களுக்கு எதிராக ஆபாச & வெறுப்பூட்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூப்பர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Similar News
News November 21, 2025
EPS-ன் ஆட்சியில் கோவைக்கு மெட்ரோ உறுதி: வானதி

EPS முதல்வரானவுடன் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று வானதி சீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்டத்தினை, வரையறைகளுக்கு உட்பட்டு மாற்றி அமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி தமிழகத்திற்கு எதிராக இருப்பது போல நடத்தப்படும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 21, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 21, 2025
வண்ணங்களின் களஞ்சியம்.. இன்று சர்வதேச டிவி தினம்

இன்று சர்வதேச டிவி தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டு ஹாலில் TV வைத்து மாடியில் ஒருவர் ஆன்டெனா திருப்பி கீழே படம் வந்துருச்சா? என கத்தும் குரல்களுக்கு இடையே, அத்திரை மின்னுவது ஒரு மாயாஜாலம். புள்ளியாய் தெரிந்த திரை விலகி, ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை இமைக்காமல் தெருவே ஒன்று கூடி ரசித்த அந்த தருணங்களால், டிவி ஒரு இயந்திரமாக தெரியவில்லை; அது மகிழ்ச்சியின் சாவியாக இருந்தது. நீங்க டிவி வாங்கிய ஆண்டு?


