News May 15, 2024
சாலையில் இப்படிக் கூட செய்வார்களா?

சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் பைக்கில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் சீண்டிவிட்டு சென்றிருக்கிறார். இதில், அப்பெண் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பொது இடத்தில் தனியாக செல்லும் பெண்ணை இப்படியெல்லாம் செய்வார்களா என்று இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான நபர்களை என்ன செய்வது மக்களே!
Similar News
News March 14, 2026
BREAKING: டெல்லி செல்லும் விஜய்.. கூட்டணியில் திருப்பம்?

கரூர் வழக்கில் CBI-ன் விசாரணைக்காக விஜய், இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். ஏற்கெனவே 2 முறை நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளித்த நிலையில், 3-வது முறையாக ஆஜராக உள்ளார். முன்னதாக, நேற்று தவெக மா.செ.,-க்கள் கூட்டத்திற்கு பிறகு NDA-வில் இணைய விஜய் OK சொன்னதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த டெல்லி விசிட்டில் அவர், பாஜக தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 14, 2026
விஜய் முடிவால் கெத்து காட்டுவாரா சீமான்?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தும் தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை. இதனால் தவெக தனித்தே போட்டி என பேசப்பட்டது. இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, அதிமுக கூட்டணியில் தவெக இணைய விஜய் இசைவு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இது சாத்தியமானால், 2026 தேர்தலிலும் தனித்து நிற்கும் ஒரே கட்சி என்ற அடையாளத்தை நாதக மீண்டும் பெறும் என்று சீமான் விரும்பிகள் கூறுகின்றனராம்.
News March 14, 2026
திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை முடித்துவைப்பு

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முடிவடையவுள்ளது. இப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஜன.20 முதல் 4 நாள்கள் நடைபெற்றது. பின்னர் பிப்.17-ல் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாதம் 20-ம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில், 2021 முதல் பொறுப்பு வகிக்கும் திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இது முறைப்படி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.


