News May 7, 2025
போர் வருமா?.. ட்ரெண்டிங்கில் #IndiaPakistanWar

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்துள்ள PM மோடி, உயர்மட்ட அளவில் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரை தொடங்கும் என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, X தளத்தில் #IndiaPakistanWar ட்ரெண்டாகி வருகிறது.
Similar News
News November 21, 2025
EPS-ன் ஆட்சியில் கோவைக்கு மெட்ரோ உறுதி: வானதி

EPS முதல்வரானவுடன் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று வானதி சீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்டத்தினை, வரையறைகளுக்கு உட்பட்டு மாற்றி அமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி தமிழகத்திற்கு எதிராக இருப்பது போல நடத்தப்படும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.
News November 21, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 21, 2025
வண்ணங்களின் களஞ்சியம்.. இன்று சர்வதேச டிவி தினம்

இன்று சர்வதேச டிவி தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டு ஹாலில் TV வைத்து மாடியில் ஒருவர் ஆன்டெனா திருப்பி கீழே படம் வந்துருச்சா? என கத்தும் குரல்களுக்கு இடையே, அத்திரை மின்னுவது ஒரு மாயாஜாலம். புள்ளியாய் தெரிந்த திரை விலகி, ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை இமைக்காமல் தெருவே ஒன்று கூடி ரசித்த அந்த தருணங்களால், டிவி ஒரு இயந்திரமாக தெரியவில்லை; அது மகிழ்ச்சியின் சாவியாக இருந்தது. நீங்க டிவி வாங்கிய ஆண்டு?


