News March 22, 2025

சம்மரில் பவர் கட் பிரச்னை வருமா?… அமைச்சர் விளக்கம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கையிருப்பு இருப்பதாகவும், 2030 வரை மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எங்கேயாவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்பட்டால், அதுவும் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News March 23, 2025

ஆக்‌ஷன் நிறைந்த சிக்கந்தர்.. ARM கதைகளம் என்ன?

image

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 3.37 நிமிடங்கள் நீளம் கொண்ட ட்ரெய்லரில் ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட கலவையாக உள்ளது. படம் சமூக கருத்தை கையில் எடுத்திருப்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News March 23, 2025

நாட்டின் சிறந்த விவசாய விஞ்ஞானி காலமானார்

image

நாட்டின் தலைசிறந்த விவசாய – தோட்டக்கலை விஞ்ஞானிகளில் ஒருவரான கிருஷ்ணலால் சத்தா (88) உடல்நலக் குறைவால் காலமானார். பத்மஸ்ரீ விருதுபெற்ற இவர் விவசாயம் தொடர்பாக 30-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தேசிய விவசாய ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய இவர் திட்ட கமிஷன், தேசிய பாமாயில் சாகுபடி கமிட்டி, ஆர்கானிக் பொருட்களுக்கான தேசிய வழிகாட்டுதல் குழு எனப் பல்வேறு அமைப்புகள் மூலம் பங்காற்றியுள்ளார். RIP

News March 23, 2025

அரசு ஊழியர்களின் தொடரும் போராட்டம்

image

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். வருகிற 30ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கின்றனர்.

error: Content is protected !!