News September 23, 2025
10, 12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றமா?

தமிழக சட்டப் பேரவை தேர்தல் 2026 மே 2-வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்னரே முடிப்பது மட்டுமல்லாமல், முடிவுகளையும் மே முதல் வாரத்திலேயே வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்.24 என்பதால், ஏப்.10-ம் தேதிக்குள் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாம்.
Similar News
News September 23, 2025
H1B விசா பிரச்னையால் விவாகரத்து கேட்கும் மனைவி?

எனது கணவர் H1B விசாவுடன் ஆண்டுக்கு ₹1.40 லட்சம் சம்பாதிக்கிறார், தற்போதைய சூழலில் இவரை விவாகரத்து செய்துவிட்டு, தன்னுடன் வேலை பார்க்கும் க்ரீன் கார்டு வைத்துள்ள நபரை திருமணம் செய்யலாமா? என்று இந்திய பெண் ஒருவர் X பதிவில் கேட்டிருந்தார். இந்த பதிவு உடனடியாக வைரலாகவே, இது டிரெண்டிங் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட பொய்யான பதிவு என சிலர் கூறுகின்றனர். இருந்தாலும் கொஞ்சம் திக்குனு தான் இருக்குது.
News September 23, 2025
தேசிய சினிமா விருதுகளுக்கு ரொக்க பரிசு எவ்வளவு?

71-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதானது தங்க தாமரை (அ) வெள்ளி தாமரை பதக்கங்கள், ரொக்கப் பரிசு ஆகிய வடிவில் வழங்கப்படும். தங்க தாமரை பதக்கம் பெறுபவருக்கு ₹3 லட்சம், வெள்ளி தாமரை பதக்கம் பெறுவோருக்கு ₹2 லட்சமும் ரொக்கம் வழங்கப்படும். ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தங்க தாமரை பதக்கம், பொன்னாடையுடன் ₹10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
News September 23, 2025
ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?