News April 19, 2025
விரைவில் அமைச்சரவையில் மாற்றமா?

உளவுத்துறை ரிப்போர்ட்டை தொடர்ந்து அமைச்சர் <<16144954>>பொன்முடியை <<>>நேரில் அழைத்து கடிந்துக்கொண்ட ஸ்டாலின், நடவடிக்கைக்கு கட்டுப்படுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம் என பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் வரவுள்ளதால் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், திமுகவின் பேச்சாளர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.
Similar News
News December 26, 2025
திருமாவளவனும் சங்கி தான்: தமிழிசை

வடமாநிலங்களின் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களை உருக்குலைத்த சம்பவங்களை மேற்கோள்காட்டி, தமிழகத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என திருமா விமர்சித்திருந்தார். இந்நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு முத்திரை குத்தக்கூடாது என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திருமாவளவனும் சங்கி தான் என அவர் காட்டமாக சாடினார்.
News December 26, 2025
டிசம்பர் 26: வரலாற்றில் இன்று

*1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
*1791 – சார்ல்ஸ் பாபேஜ் பிறந்தநாள்.
*1925 – நல்லகண்ணு பிறந்தநாள்.
*2004 – சுனாமியால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் 3 லட்சம் பேர் வரை இறந்தனர்.
*2024 – மன்மோகன் சிங் நினைவுநாள்.
News December 26, 2025
மைசூரில் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி பலி

கர்நாடகாவின் மைசூரின் கண்காட்சி ஆணையம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலூன்களை காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவும், இதில் பலூன் வியாபாரி இறந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


