News August 5, 2024

மகளிர் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா?

image

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் அக்.3 முதல் அக்.20 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. தற்போது அங்கு வன்முறை வெடித்து ராணுவ ஆட்சியின் கீழ் அந்நாடு சென்றுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை அங்கு நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வன்முறை குறைந்தால் மட்டுமே அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Similar News

News January 17, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 16, 2026

டாஸ்மாக் அசுர வசூல்.. வரலாற்று சாதனை

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி TN-ல் கடந்த 2 நாள்களில் ₹517.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 14-ம் தேதி ₹217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று ₹301 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ₹98.75 கோடிக்கு விற்றுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாள்களில் ₹725 கோடிக்கு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 நாள்களில் ₹518 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

News January 16, 2026

முதல்முறையாக Sunday-ல் பங்குச்சந்தை

image

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நேரத்தில் (காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!