News September 18, 2025
கல்யாணம் கனவாவே போயிடுமா சார்..

பொருளாதாரம், சமூக மாற்றங்கள், தொழில் இலக்கு உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது பலரும் சிங்கிளாக இருக்கவே விரும்புகின்றனராம். அதிகபட்சமாக, ஸ்வீடனில் 50% பேர் சிங்கிளாகவே வாழ்கின்றனராம். ‘அமைதியே பிரதானம்’ என்பதாலேயே சிங்கிளாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக நார்வே, பின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவில் 25% பேர் (18 – 35 வயது) சிங்கிளாக உள்ளனராம். நீங்க எப்பிடி?
Similar News
News March 15, 2026
அதிக தொகுதிகளை CPM கேட்பது ஏன்? பாலகிருஷ்ணன்

திமுகவிடம் CPM அதிக தொகுதிகளை கேட்டு வருவதால் தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. இந்நிலையில், அதிக தொகுதிகளை CPM கேட்பது பதவி ஆசைக்காக இல்லை என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிக MLA-க்கள் இருந்தால் மட்டுமே சட்டமன்றத்தில் அதிக நேரம் மக்கள் பிரச்சனையை பற்றி பேச முடியும் என தெரிவித்துள்ளார். தற்போது 2 MLA-க்கள் மட்டுமே உள்ளதால் குறைந்த நேரமே கிடைக்கிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2026
வரலாற்றில் இன்று

➤ 1776 – தெற்கு கரோலினா இங்கிலாந்திடம் இருந்து விடுதலையை பெற்றது.
➤ 1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.
➤ 1993 பாலிவுட் நடிகை ஆலியா பட் பிறந்தநாள்.
➤ 2007 – சத்தீஸ்கரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
➤2011 – சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கியது.
News March 15, 2026
நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்: OPS

நான் செய்த மிகப்பெரிய தப்பு EPS-ன் 4 ஆண்டுக் கால ஆட்சி தொடர்வதற்கு நம்பிக்கை தீர்மானத்தின் போது 5 MLA-க்களை வைத்து ஆதரவு தெரிவித்ததுதான் என OPS கூறியுள்ளார். மேலும் துரோகம் செய்ததால் தென்பகுதி மக்கள் EPS-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அரசியலில் உள்ள ஒரே ஒரு துரோகியான அவரை தமிழக வாக்காளர்கள் அரசியலிருந்து துடைத்து எறிவார்கள் எனவும் சாடியுள்ளார்.


