News December 5, 2024
அரசு ஊழியா்களின் ஓய்வு வயது மாற்றப்படுமா?

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “குடிமைப் பணிகளில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் ‘ரோஸ்கர் மேலா’ (Employment camp) நடத்தப்படும்” என்றார்.
Similar News
News April 29, 2025
பப்ளிசிட்டி இல்லாமல் உதவும் அஜித்.. ஜனாதிபதி புகழாரம்

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
News April 29, 2025
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு புதிய ஆணை

சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News April 29, 2025
இந்தியாவை கடுப்பேத்தும் PAK.. எல்லையில் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் 5-வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்., இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.