News April 1, 2024

ரெப்போ வட்டி விகிதம் குறையுமா?

image

பெட்ரோல், டீசல், LPG சிலிண்டர் விலை சமீபத்தில் கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டது. இதனால் நாட்டின் சில்லறை பணவீக்கம் குறையும் எனக் கணித்துள்ள நிபுணர்கள், ஏப்.3-5 வரை நடைபெற உள்ள RBI நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதமும் குறைக்கப்படலாம் எனக் கூறுகின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வீடு, வாகனக் கடன் போன்ற கடன்களை பெற்றவர்கள் செலுத்தும் கடனின் வட்டியும் குறைய வாய்ப்புள்ளது.

Similar News

News January 11, 2026

மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

image

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை CM ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 11, 2026

₹31,500 மானியம் கிடைக்கும்.. அரசு திட்டம்!

image

மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள், மண்புழு உரம் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் இணைய விவசாயியிடம் 1 – 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். அப்ளை பண்ண <>Click Here<<>>. SHARE.

News January 11, 2026

தேர்தலுக்கு பிறகே அதிகார பங்கு பற்றி தெரியும்: சண்முகம்

image

திமுக கூட்​ட​ணிக்கு சில கட்​சிகள் வர இருப்​பதால், சீட் பங்கீடு குறித்த பேச்​சு​வார்த்தையை தொடங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளதாக CPM சண்முகம் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்ற அவர், தேர்தலுக்கு பிறகு ‘ஆட்சி​யில் பங்​கு’ என்ற சூழல் குறித்து முடிவு செய்​யப்படும் என கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணியை தோற்கடிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!