News September 4, 2025
டீ, காபி விலை குறையுமா?

காபிக்கு தேவையான வறுத்த சிக்கோரி, எசன்ஸ் உள்ளிட்டவற்றிற்கான GST வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டன்ட் டீ, Iced டீ பவுடர் ஆகியவற்றிற்கும் 5% ஆக GST குறைக்கப்பட்டுள்ளது. இதனால் டீ, காபியின் விலை குறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் தான் டீ, காபியின் விலை முறையே ₹15, ₹20 என உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த GST மாற்றம், வரி செலுத்தும் வருமான வரம்பிற்கு உட்பட்ட ஓட்டல்களுக்கே பொருந்தும்.
Similar News
News September 4, 2025
இந்த 8 மூலிகைகள் போதும்.. குடல் பிரச்னை பறந்து போகும்!

உணவே மருந்து என்ற வரையறுத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால், பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றாததே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில், வயிறு, குடல் சார்ந்த பாதிப்புகளை குணப்படுத்தும் 8 சிறந்த மூலிகைகளை ஹார்வார்ட் பல்கலை.,யில் பயிற்சி இரப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரவ் பட்டியலிட்டுள்ளார். அதை இந்த தொகுப்பில் காணலாம்.
News September 4, 2025
அரசியலுக்காக விமர்சனங்கள்: CM ஸ்டாலின் பதிலடி

எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் இருந்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தனது வெளிநாட்டு பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களை புறந்தள்ளுவதாக பதிலளித்துள்ளார். ஜெர்மனியில் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
News September 4, 2025
தோனி குறித்த பேச்சு.. மெளனம் கலைத்த இர்ஃபான் பதான்

ஒருவரின் (தோனி) அறையில், அவரை மகிழ்விக்க ஹூக்காவை வைக்கும் நபர் நான் அல்ல என்று இர்ஃபான் பதான் கூறிய பழைய வீடியோ வைரலாகி விவாதத்தை கிளப்பியது. தோனி, தனக்கு பிடித்தவர்களையே பிளேயிங் 11-ல் விளையாட வைப்பார் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகள் பழமையான ஒரு திரிக்கப்பட்ட வீடியோ வெளிவந்துள்ளதாக பதான் கூறியுள்ளார். இது ரசிகர்களின் போரா (அ) பப்ளிசிட்டியா என்றும் கேட்டுள்ளார்.