News April 20, 2025
தங்கம் விலை குறையுமா?

ஓராண்டில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹20,000 உயர்ந்திருப்பதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிலர் தங்கத்தின் விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், தங்கத்தின் விலை எப்போது எப்படி நகரும் என்பதை கணிக்க முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். விரைவில், ஒரு கிராம் தங்கம் ₹10,000க்கும் போகலாம் அல்லது குறையவும் செய்யலாம். சிறுக சிறுக தங்கத்தை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும்
Similar News
News December 2, 2025
தஞ்சை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
FLASH: ஆட்டம் காட்டும் பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் நேற்று போலவே இன்றும் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 332 புள்ளிகள் சரிந்து 85,308 புள்ளிகளிலும், நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 26,077 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக ICICI Bank, Bajaj Finserv, Axis Bank, Reliance உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 12% வரை குறைந்துள்ளது.
News December 2, 2025
2026 தேர்தலுக்கு பிரேமலதா போடும் புது ரூட்டு

தேமுதிக தொண்டர்களை உயர் பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பதே தனது ஆசை என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் எனக் கூறி வரும் அவர், கட்சிக்காக உழைத்த புது முகங்களை வேட்பாளர்களாக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் என்ற பிம்பம் உடையும் எனவும் பிரேமலதா நம்புவதாக கூறப்படுகிறது.


