News February 12, 2025

ஜெ., மறைவிற்கு பின் போட்ட திட்டம் இப்போ நடக்குமா?

image

MGR காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன், சசி, TTVக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர். ஜெ., மறைவுக்கு பிறகு அவரை தான் முதல்வராக்க திட்டமிடப்பட்டிருந்தது. திடீர் திருப்பமாக தலைமை பதவிக்கு இபிஎஸ் வந்தார். அதன்பின், சசிகலா நீக்கம், பாஜக உடனான கூட்டணி முறிவு என அதிரடி காட்டியதால், தற்போது<<15434980>> EPS-க்கு <<>>செங்கோட்டையன் மூலம் செக் வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 12, 2025

ஐகோர்ட் தீர்ப்பால் இபிஎஸ்-க்கு பின்னடைவு

image

அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் (ECI) விசாரிக்க அனுமதி வழங்கிய ஐகோர்ட்டின் <<15436928>>தீர்ப்பு<<>> இபிஎஸ்-க்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள சூழலில் எடப்பாடிக்கு ஆதரவு நிலைப்பாடு குறைய ஆரம்பிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உங்கள் கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க.

News February 12, 2025

கடுப்பான விமானப்படை தளபதியை Cool செய்த HAL

image

2021ல் ஆர்டர் செய்யப்பட்ட 83 தேஜஸ் Mk1A போர் விமானங்கள் விரைவில் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் என பொதுத்துறை நிறுவனமான HAL உறுதியளித்துள்ளது. போர் விமானங்களுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்து அதிருப்தியடைந்த விமானப்படை தளபதி ஏபி சிங், HAL மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறிய நிலையில், அந்நிறுவனம் தற்போது விளக்கமளித்துள்ளது. தொழில்நுட்ப சிக்கல்களே தாமதத்திற்கு காரணம் என HAL கூறியுள்ளது.

News February 12, 2025

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர் மரணம்

image

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புர்காஜியைச் சேர்ந்த ரஜத்(25), மனு என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் விஷம் குடித்த நிலையில், ரஜத் உயிரிழந்தார். நல்ல மனிதனை சாதி கொன்றுவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!