News August 5, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

image

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News August 5, 2025

ஆகஸ்ட் 5: வரலாற்றில் இன்று

image

*1895: கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களுல் ஒருவரான ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இறந்தநாள். *1930: அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள். *1958 – தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. *1965 – பாகிஸ்தானியப் வீரர்கள் எல்லையைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.

News August 5, 2025

தீவிர தேர்தல் Mood-ல் பாஜக

image

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வாரத்தில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், NDA கூட்டணி கட்சி MP-களுக்கு தேர்தல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க, உள்துறை அமைச்சக வளாகத்தில் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்துள்ளது.

News August 5, 2025

தலைமறைவாக இருந்த நடிகை கைது

image

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியில் வந்த அவர், கோர்ட்டுக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.

error: Content is protected !!