News April 28, 2025
பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
Similar News
News November 27, 2025
₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள்: APPLY

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 20 – 30. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.1. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 27, 2025
திமுகவிலிருந்து யாரும் பேசவில்லை: செங்கோட்டையன்

தவெகவில் இணைவதற்கு முன் திமுக தரப்பில் இருந்து செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், திமுகவில் இருந்து யாரும் என்னை சந்திக்கவில்லை, கட்சியில் சேர அழைக்கவில்லை என செங்கோட்டையன் மறுத்துள்ளார். சேகர்பாபு உடன் நான் இருப்பதை போன்ற ஒரு புகைப்படம் கிடைத்தால் காட்டுங்கள் பதிலளிக்கிறேன் எனவும் அவர் கேட்டுள்ளார்.
News November 27, 2025
பிரபல நடிகர் மரணம்… மனைவி கண்ணீர்!

நடிகர் தர்மேந்திராவின் மரணம் குறித்து அவரின் மனைவியும் நடிகையுமான ஹேமாமாலினி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் மரணத்தால் வாழ்க்கை வெறுமையாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தர்மேந்திரா தனக்கு கணவராக மட்டுமின்றி, நல்ல நண்பராகவும், வழிகாட்டியும் இருந்தார் என சுட்டிக்காட்டிய ஹேமமாலினி, அவரின் நினைவுகள் நிலைத்திருக்கும், அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனவும் பதிவிட்டுள்ளார்.


