News September 10, 2025
அடுத்த நேபாள பிரதமர் ராப் பாடகர்?

அண்டை நாடான நேபாளத்தில் ஜென் Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி. சர்மா ஒலியின் கம்யூ., ஆட்சி கவிழ்ந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதில் காத்மாண்டு மேயரான பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா பெயர் முன்னிலையில் இருக்கிறது. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
Similar News
News March 18, 2026
புதியவர்களால் EPS-க்கு அச்சம் வந்துவிட்டது; ரகுபதி

தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்வது மட்டுமே EPS-ன் ஒரே இலக்கு என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனற எண்ணம் EPS-க்கு இல்லை என்றும் நிறைய புதிய போட்டியாளர்கள் வந்திருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தைகூட சரியாக நடத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News March 18, 2026
கண் பார்வையை கூர்மையாக்க இதுதான் பெஸ்ட்!

டிஜிட்டல் யுகத்தில் 6 வயதிலேயே குழந்தைகள் கண்ணாடி போடுவதை பார்க்க முடிகிறது. ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக கண் பார்வை பாதிப்பை தடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வையை கூர்மையாக்க உதவும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளின் பட்டியல் மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பாருங்கள்.
News March 18, 2026
ஏன் அமித்ஷா அழைத்து பேசினார்? TTV

அதிமுக, அமமுகவை இணைக்க ஏன் பாஜக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதற்கு TTV தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அண்ணன் – தம்பி இடையே பிரச்னை ஏற்பட்டால் ஊரில் உள்ள பெரியவர்கள் தீர்த்து வைப்பது போல, தன்னையும் EPS-ஐயும் அமித்ஷா சேர்த்து வைத்தாக அவர் கூறியுள்ளார். மேலும், இருகட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


