News September 12, 2025
IT RETURNS காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

வருமான வரி கணக்கு (IT Returns) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கெடு தேதியான செப்.15-க்கு இன்னும் 3 நாள்களே இருக்கும் நிலையில் இதுவரை 5.47 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். மேலும், Form 26AS, TDS, tax credit verification போன்றவற்றுக்கான TRACES தளமும் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. நீங்கள் IT Returns தாக்கல் செய்துவிட்டீர்களா?
Similar News
News September 13, 2025
டாலர் சிட்டியில் தொழில் பாதிப்பு: EPS

டிரம்ப் வரி விதிப்பால் டாலர் சிட்டியான திருப்பூரில் 50% தொழில்கள் முடங்கிவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். தொழில் அதிபர்களை ஸ்டாலின் சந்திக்காதது தவறு என தெரிவித்த அவர், பாதிப்புகளை PM மோடியிடம் CM எடுத்து கூறி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முன் உள்ளூர் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனவும் திமுக அரசை EPS வலியுறுத்தியுள்ளார்.
News September 13, 2025
ராசி பலன்கள் (13.09.2025)

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – சினம் ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – ஜெயம் ➤கன்னி – நன்மை ➤துலாம் – பகை ➤விருச்சிகம் – இன்பம் ➤தனுசு – திடம் ➤மகரம் – பெருமை ➤கும்பம் – மகிழ்ச்சி ➤மீனம் – விவேகம்.
News September 12, 2025
நெருங்கும் தீபாவளி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை?

டெல்லியில் மட்டும் ஏன் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது என CJI பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு எனவும், பட்டாசு, காற்று மாசுபாடு கொள்கைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அவரது இந்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.