News March 4, 2025
பழிதீர்க்குமா இந்திய அணி?

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மதியம் 2:30 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. 2023 WC ஃபைனலின் தோல்வியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு, இன்று பதிலடி கொடுக்குமா இந்தியா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நீங்க சொல்லுங்க யார் ஜெயிப்பாங்க?
Similar News
News November 24, 2025
தமிழகத்தை உலுக்கிய கோர விபத்து.. CM ஸ்டாலின் இரங்கல்

தென்காசியில் <<18373837>>2 பஸ்கள் நேருக்குநேர்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
டாப் 10 உயரமான சிலைகள்

உலகம் முழுவதும் உள்ள சிலைகள், ஒவ்வொன்றும் நம்பிக்கை, வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, வானுயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான சிலைகள், கட்டுமான சாதனையாக மட்டுமல்லாமல், தேசத்தின் பெருமையாகவும் உள்ளன. இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள டாப் 10 உயரமான சிலைகள் எங்கெல்லாம் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. அரசு முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் ₹1 அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்ட மெசேஜ் உங்களுக்கு வந்தால், நீங்கள் திட்டத்தில் புதிதாக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த முறையும் அரசு இதேபோல் தான் செய்தது. யாருக்கெல்லாம் மெசேஜ் வந்திருக்கிறது?


