News December 5, 2024
பிங்க் பால் டெஸ்டில் சாதிக்குமா இந்திய அணி!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது BGT டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. நாளை காலை 9.30 தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, ஹாட் ஸ்டாரில் ஓடிடியில் காணலாம். இதுவரை இந்தியா- ஆஸி ஒருமுறை பிங்க் பால் டெஸ்டில் மோதியுள்ளன. அதில் ஆஸி.யே வெற்றி பெற்றுள்ளது. கடந்தமுறை அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தருமா?. கீழே கமெண்ட் பதிவிடுங்கள்.
Similar News
News January 18, 2026
₹900 கோடியை நெருங்கும் மது விற்பனை

பொங்கல் திருநாளையொட்டி 2 நாள்களில் (ஜன. 14,15) மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியானது. 4 நாள் கொண்டாட்ட முடிவில் விற்பனை ₹900 கோடியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பொங்கலுக்கு 4 நாள்களில் ₹725 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு மது விற்பனை விவரம் வெளியான நிலையில், பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
News January 18, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை சொன்னார்

புதுக்கட்சி ஒன்று விரைவில் NDA கூட்டணிக்கு வரும் என EPS கூறி வருகிறார், அது தவெக என்றால் சந்தோஷம் என பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என தெளிவாக அறிவித்து விட்டோம்; அதனால் CM வேட்பாளர் நான் தான் எனக்கூறும் விஜய்யுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் கூட்டணி குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
News January 18, 2026
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இன்றே கடைசி

தமிழகத்தில் 2025 நவம்பர் 4-ம் தேதி SIR பணிகளை ECI தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை பட்டியலில் பெயரை சேர்க்க சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியாகும்.


