News June 5, 2024
வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி?

இந்தியா – அயர்லாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, இன்றிரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக, இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது இந்திய அணியின் முதல் லீக் போட்டி என்பதால், டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில், அயர்லாந்து ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 20, 2026
ஒரே அடியாக விலை ₹20,000 குறைந்தது

சர்வதேச சந்தையில் ஏற்றத்தில் உள்ள போதிலும், இன்று நம்மூரில் வெள்ளி விலை சரிவைக் கண்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹5 குறைந்து ₹260-க்கும், மொத்த விலையில் பார் வெள்ளி கிலோ ₹5,000 குறைந்து ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 14-ம் தேதி கிலோ ₹2,80,000-க்கு விற்பனையான வெள்ளி, 4 நாள்களில் மட்டும் ₹20,000 குறைந்துள்ளதால் முதலீடு நோக்கில் வெள்ளி வாங்க நினைப்போர் சற்று கவனமாக இருங்கள்.
News March 20, 2026
NDA-வா? அதிமுக கூட்டணியா? TTV தினகரன் விளக்கம்

தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை அதிமுகவா பாஜகவா என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, டெல்லி அனுமதியுடனே அதிமுக செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருக்கிறது என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணி என்பது பாஜக தலைமையிலான கூட்டணி என்பதை CM-க்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
19 சீசன்கள்.. IPL-ன் அசைக்க முடியாத 4 ஜாம்பவான்கள்!

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL-ன் அனைத்து சீசன்களிலும்(19 சீசன்கள்) 4 பேர் மட்டுமே விளையாடியுள்ளனர். தோனி(CSK, PWI), ரோஹித் சர்மா(MI, DCH), விராட் கோலி(RCB) ஆகியோருடன் இந்த லிஸ்ட்டில் மனிஷ் பாண்டேவும்(RCB, SRH, DC, PWI, MI, LSG, KKR) உள்ளார். இதில், அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரராக விராட் கோலி மட்டுமே உள்ளார். ரஹானே, ஜடேஜா ஆகியோர் 18 சீசன்களில் விளையாடியுள்ளனர்.


