News August 4, 2024
ஆட்டம் காணுமா இந்திய பங்குச்சந்தைகள்?

வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. நாஸ்டாக் சுமார் 2.5% மதிப்பினை இழந்தது. இதன் தாக்கம் நாளை இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையாததால் இவ்வாறு பங்குச்சந்தைகள் சரிவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். இதிலிருந்து சந்தை மீளுமா? அல்லது கரடிச்சந்தை தொடங்குமா என்று நிபுணர்கள் உற்று நோக்குகின்றனர்.
Similar News
News January 17, 2026
நாளை தை அமாவாசை.. வீட்டில் கட்டாயம் இதை செய்யுங்க

*தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி சென்று முன்னோரின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும். *முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். *முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். *வீட்டில் தெய்வம் சம்பந்தமான பூஜைகளை தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.
News January 17, 2026
துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 17, 2026
திமுகவின் கோட்டையை குறிவைக்கும் பாஜக?

மறைந்த Ex CM கருணாநிதி முதன்முதலாக(1957) போட்டியிட்டு வென்ற தொகுதி குளித்தலை. அதன்பிறகு அது அதிமுகவின் கோட்டையாக மாறியது. ஆனால் 2016-ல் இருந்து அங்கு மீண்டும் தலைதூக்கியிருக்கிறது திமுக. இதனால், இம்முறை குளித்தலையில் திமுகவை தோற்கடித்தால் இமேஜ் கூடும் என்று நினைக்கிறதாம் பாஜக தலைமை. அத்தொகுதியை EPS-யிடம் கேட்க, அவரும் அதற்கு ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.


