News May 26, 2024
இந்த ஆண்டாவது லேப்டாப் கொடுக்குமா அரசு?

புதிய கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் அரசு வெளியிடாமல் இருப்பதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பை, இந்த ஆண்டாவது அரசு நிறைவேற்ற முன்வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 4, 2026
தனிக்கட்சி தொடங்கினார்.. இபிஎஸ் அதிர்ச்சி

‘புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கியுள்ளார். புரட்சி என்பது MGR, ஜெயலலிதாவை குறிக்கும் என தெரிவித்த அவர், தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பை முன்னெடுத்த இவர், OPS திமுகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்கியது EPS-க்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 4, 2026
ரேபிடோ ஓட்டுநர் பெயரில் ₹300 கோடி.. சிக்கிய ஹவாலா கும்பல்

அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சம்பந்தப்பட்ட ₹550 கோடி ஹவாலா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதம் ₹10,000 சம்பாதிக்கும் ரேபிடோ ஓட்டுநரான பிரதீப் பெயரில் ₹300 கோடி வரவு வைக்கப்பட்டது ED-க்கு சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பான விசாரணையில், பிரதீப் தனது வங்கி கணக்கை ₹25,000-க்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 4, 2026
பஹல்காம் தாக்குதல் வழக்கில் சீனாவிடம் உதவி கேட்கும் NIA

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட GoPro Hero 12 Black ரக கேமராவை ஆய்வு செய்ததில், அது 2024 ஜன.30-ம் தேதி சீனாவின் டோங்குவான் பகுதியில் முதல்முதலாக பயன்படுத்தியதும், பின்னர் சீன விநியோகஸ்தர் மூலம் கேமரா கைமாறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சர்வதேச சட்ட உதவி கோரி சீன அதிகாரிகளுக்கு NIA கடிதம் அனுப்பியுள்ளது.


