News December 6, 2024
தலைநகரை உலுக்குமா விவசாயிகள் போராட்டம்?

குறைந்தபட்ச ஆதார விலை (MSP) உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லி சலோ பேரணியை தொடங்கியுள்ளனர். ஹரியானா- பஞ்சாப் எல்லை ஷம்புவில் கூடிய விவசாயிகளை கலைக்க ஹரியானா அரசு முள் தடுப்பு, பேரிகேட், கண்ணீர் புகை வாயு என பல யுக்திகளை பயன்படுத்துகிறது. அரசு விவசாயிகளுடன் பேச தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் போகவும் தயார் என்கிறார் விவசாயி நல்வாழ்வுத் துறை அமைச்சர் பகீரத் சவுத்ரி.
Similar News
News September 11, 2025
டாலருக்கு மாற்றாக உள்ளூர் கரன்சியில் வர்த்தகம்: PM மோடி

இந்தியா – மொரிஷியஸ் இடையேயான வர்த்தகத்தை, அமெரிக்க டாலருக்கு பதிலாக, அந்தந்த நாடுகளின் கரன்சியில் மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்படும் என PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மொரிஷியஸ் PM நவீன்சந்திர ராம்கூலத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், மொரிஷியஸின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறப்பு பொருளாதார தொகுப்பை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
ரேஷன் அட்டைதாரர்களே! தேதி குறிச்சு வச்சுக்குங்க!

உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அரசு திட்டங்களை பெற ரேஷன் அட்டை முக்கிய ஆதாரமாக உள்ளது. இத்தகைய சூழலில் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விரும்புவோருக்கு செப்.13-ம் தேதி முகாம் நடைபெறுகிறது. இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல், தொலைபேசி எண் மாற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடத்தப்படும் இந்த முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News September 11, 2025
திராட்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

திராட்சைப் பழமாக இருந்தாலும், உலர்ந்த திராட்சையாக இருந்தாலும் ஒரே மாதிரியான மருத்துவ குணங்கள் உள்ளன. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு திராட்சை அளிக்கிறது. தொடர்ந்து திராட்சை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் பல நன்மைகளும் கிடைக்கின்றன. அதை பட்டியலிட்டு மேலே போட்டோஸாக வரிசைப்படுத்தியுள்ளோம். Swipe செய்து திராட்சையின் மகிமைகளை அறிந்துகொள்ளுங்கள்.