News October 6, 2025
பிஹாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பா?

பிஹார் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பிஹாரில் கடும் போட்டி இருக்கும் 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற காங்., புகார் குறித்து விளக்கமளிக்கும் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதியை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 6, 2025
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகாதா?

விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகும் என நம்பிக்கொண்டிருந்த வேளையில், கரூர் அசம்பாவிதம் படக்குழுவை கதிகலங்க செய்துள்ளது. இதன் தாக்கம் இன்னும் 3 மாதங்களுக்காவது இருக்கும் என்பதால் பட ரிலீஸை பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிவைக்கலாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்களாம். படத்தை வாங்கிய OTT நிறுவனமும் இதற்கு OK சொல்ல, விஜய் பதிலுக்காக படக்குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
News October 6, 2025
திராவிடம் செத்துவிட்டது: சீமான்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் யார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழின தலைவர்களின் மொழி புரட்சியை தங்களது லாபத்திற்காக திராவிடர்கள் பயன்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், திராவிடம் செத்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், கடற்கரை எங்களுக்கு கடற்கரை தான்; எவருக்கும் கல்லறை இல்லை; தேர்தலில் NTK முன்னிலை என்ற உடனே தானாகவே கல்லறை இடிக்கப்படும் என்றார்.
News October 6, 2025
BiggBoss : 20 போட்டியாளர்களின் விவரம்

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இம்முறையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில் அரோரா சின்கிளேர், ரீல்ஸ் திவாகர், FJ, பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் என 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 105 நாள்கள் நிகழ்ச்சி நடக்கும்.