News October 3, 2025
திமுக – விசிக கூட்டணியில் முறிவா? திருமாவளவன்

கரூர் சம்பவத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் உள்ளதா என திருமாவளவன் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையானது. இதனால் திமுக – விசிக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தனது விமர்சனத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும், திமுக – விசிக கூட்டணியில் முறிவு ஏற்படாது என்றும் திருமா விளக்கம் அளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
Similar News
News October 3, 2025
‘SORRY அம்மா.. நான் சாகப் போறேன்’

‘அம்மா, என்ன மன்னிச்சிரு. எனக்கு வாழ விருப்பமில்ல. அப்பா இறந்த பிறகு, தாத்தா ஒவ்வொரு வாரமும் சண்டை போடுறாரு. நிம்மதியா வாழ விடமாட்டேங்கிறாரு. தாத்தாவுக்கு தண்டனை கிடைக்கணும்.’ தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிறுமி அஞ்சலி(17) கடைசியாக எழுதிய வரிகள் இவை. தந்தைவழி தாத்தா தொடர்ந்து தகராறு செய்ததால் மன உளைச்சலில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 3, 2025
நிலத்திலும் வாழும் மீன் எது தெரியுமா?

மட்ஸ்கிப்பர்கள் மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை. இவை தனது Gills-களில் தண்ணீரை சேமித்து வைப்பதால், நிலத்தில் வாழும்போது தனது தோல், வாய் மூலம் சுவாசிக்க இதற்கு ஏதுவாக இருக்கிறது. இதன் உடல் அமைப்பு, நிலத்தில் ஊர்ந்து செல்லவும், தாவவும் உதவுகிறது. எனவே இந்த மீன்களால் நிலத்தில் 3 நாள்கள் முதல் பல வாரங்கள் வரை வாழும் என்கின்றனர். இந்த அதிசயத்தை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 3, 2025
உலகளவில் மிகவும் பிரபலமான இந்திய படம் எது தெரியுமா?

தொடர்ந்து, உலகளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஹாலிவுட் படங்களை போலவே இன்னும் சில ஆண்டுகளில் உலக சினிமாவின் மையப்புள்ளியாக இந்திய சினிமா மாறிவிடும். இந்த நிலையில்தான், 21-ம் நூற்றாண்டில் உலகளவில் மிகவும் பிரபலமான இந்திய படங்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை மேலே கொடுத்துள்ளோம். வலது பக்கம் Swipe செய்து, அந்த லிஸ்ட்டை பாருங்க.