News September 5, 2025

NIA வசம் செல்லுமா தர்மஸ்தலா வழக்கு?

image

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த புகார் நாட்டையே பதற வைத்தது. இந்த வழக்கை NIA விசாரிக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த ‘சனாதன சாந்த் நியோகா’ என்ற அமைப்பு அமித்ஷாவிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளது. வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும் எனவும் அவர்களிடம் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

Similar News

News March 17, 2026

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகம்!

image

கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று தலைகீழ் மாற்றமாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹280-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் இன்று தங்கம் <<19404687>>விலை சவரனுக்கு ₹480<<>> குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2026

தருமபுரி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

நான் அப்பாயின்ட்மென்ட் CM தான்: OPS

image

அண்ணா, கருணாநிதி, MGR, ஜெ., ஸ்டாலின் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM-கள் என்றும், தான் உள்பட மற்றவர்கள் அப்பாயின்ட்மென்ட் CM-கள் (நியமன முதல்வர்கள்) என OPS கூறியுள்ளார். EPS-யே அவர் இப்படி மறைமுகமாக கூறியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஜெ., வழக்கில் சிக்கியபோது 2 முறை CM ஆன OPS, இறுதியாக ஜெ., மறைந்த பின்பு CM ஆனார். ஜெ., இறந்தபிறகு ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைக்கு பிறகு EPS முதல்வரானார்.

error: Content is protected !!