News April 24, 2024
லக்னோ அணிக்கு பதிலடி தருமா சென்னை அணி?

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இதுவரை இரு அணிகளும் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் சம பலத்தில் உள்ளன. உள்ளூரில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் சென்னை அணி வென்றுள்ளது. சென்னை அணியின் வெற்றி இன்று தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Similar News
News January 2, 2026
பிராந்திய மொழிகளை கற்க வேண்டும்: மோகன் பகவத்

குறைந்தபட்சம் நம் வீடுகளிலாவது தாய்மொழியில் பேச வேண்டும் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் அங்குள்ள பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் தான் என குறிப்பிட்ட அவர், அவை அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்றார்.
News January 2, 2026
2026: அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள்

2025 கோலிவுட்டுக்கு கலவையான ஆண்டாக அமைந்தது. ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் சொதப்பிய நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது 2026 பொங்கல் அன்றே 2 பெரிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இந்த வருடம் முழுவதும் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. நீங்க இந்த வருஷம் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது?
News January 2, 2026
மவுசு குறையாத திருப்பதி லட்டு!

2025-ம் ஆண்டில் திருப்பதியில் 13.52 கோடி லட்டுகள் விற்பனையாகியுள்ளன. 2024-ல் 12.15 கோடி லட்டுகள் விற்பனையான நிலையில், கடந்த வருடம் கூடுதலாக 1.37 கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விற்பனையாகும். அண்மையில் திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் இருந்ததாகச் சர்ச்சை வெடித்தபோதிலும், பக்தர்களின் நம்பிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.


