News March 13, 2025

மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பட்ஜெட்?

image

சட்டசபையில் நாளை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதுதொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், பெண்கள், இளைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 15, 2026

தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

image

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான தேதி வரும் செவ்வாய்கிழமை (மார்ச் 17) அறிவிக்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணி, பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News March 15, 2026

திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்தது? EPS

image

2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக, நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என்று EPS விமர்சித்துள்ளார். ஒரு திட்டத்திற்காக CM ஸ்டாலின் குழு அமைப்பார். ஆனால், அந்த குழு அப்படியே போய்விடும், இவ்வாறு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்தது என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். வரும் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தலாக அமையும் எனவும் சூளுரைத்துள்ளார்.

News March 15, 2026

ஒரே மாதத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்: அமித்ஷா

image

பஞ்சாபில் வாக்கு வங்கியை உயர்த்திவரும் பாஜக, 2027 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற பேரணியில் பேசிய அமித்ஷா, காங்., அகாலி தளம், ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்துள்ள நிலையில் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஒரு மாதத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!