News August 31, 2025
பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா? கனிமொழி கேள்வி

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கடல் உணவுகள், 50% வரி விதிப்பால் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில், நடுக்கடலிலேயே சரக்குகள் திருப்பி அனுப்பப்படும் அவலத்தை பார்க்க வேதனையாக உள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார். மீனவர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 1, 2025
விஜய் கூட்டணியில் இணையும் 4 தலைவர்கள்? லிஸ்ட் இதோ

விஜய் தலைமையில் கூட்டணி அமையவுள்ளதாக <<17574027>>TTV <<>>பேசியது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. BJP கூட்டணியில் அமமுக இருப்பதாக TTV சொன்னாலும், கூட்டணியை நாங்களே முடிவு செய்வோம் என EPS அதை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையில் EPS முதுகில் குத்திவிட்டதாக <<17572733>>பிரேமலதா <<>>சாடியிருக்கிறார். இதனால், விஜய்யின் TVK கூட்டணியில் அமமுக, தேமுதிக, <<17577245>>புதிய தமிழகம்<<>>, OPS இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 1, 2025
மன அமைதியடைய உதவும் ‘சுகாசனம்’!

✦மன அமைதி அடைய, குழப்பங்கள் நீங்க இந்த யோகாசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
➥முதலில் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
➥சம்மணங்கால் போட்டு, முதுகு தண்டு நேராக இருக்கும்படி அமரவும்.
➥படத்தில் உள்ளது போல, கைகளை கால் மூட்டுகளின் மீது வைத்து, கண்களை மூடிக் கொண்டு, மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியே விட வேண்டும். SHARE IT.
News September 1, 2025
அஜித்துடன் இருக்கும் இந்த இளம் ரேஸர் யார்?

யாருப்பா இந்த குட்டி ரேஸர்? என்ற கேள்வியே தற்போது இணையத்தில் கேட்கப்பட்டு வருகிறது. அஜித்குமார் உடன் இருக்கும் இவர், சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் (13). FIM MiniGP ஜெர்மனி பைக் ரேஸில் பங்கேற்று வரும் இவர், இதுவரை பல ரேஸ்களில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில் தான், ஸ்பெயினில் நடக்கவுள்ள பைக் ரேஸில் கலந்துகொள்ளவுள்ள ஜேடனுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.