News March 26, 2025
ஏப்ரலில் அறிவிக்கப்படுமா அதிமுக – பாஜக கூட்டணி?

அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற கேள்விக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு. இதில், கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்றும், பிரிந்து சென்றவர்களை சேர்க்க நிர்பந்திக்க மாட்டோம் என்றும் பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 29, 2025
நீட் தேர்வு மாணவர் கொல்லி: அன்புமணி

நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட 2வது மாணவி தர்ஷினி என x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 29, 2025
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது.
News March 29, 2025
நீங்க எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?

இப்போதெல்லாம் காலை கண் விழிப்பதே போனின் அலாரம் சத்தம் கேட்டு தான். கையுடன் போனை ஒட்டிவைத்தது போல ஆகிவிட்டது நிலைமை. ஒரு இந்தியர், சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரம் வரை போனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் 1.1 லட்ச கோடி மணி நேரத்தை போனை பார்த்து செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?