News June 15, 2024

பாமகவுக்கு செல்லுமா அதிமுக வாக்கு?

image

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 2011 அதிமுக கூட்டணி, 2016 திமுக, 2019 இடைத்தேர்தல் அதிமுக, 2021 திமுக என மாறிமாறி வெற்றிபெற்று வந்தன. சராசரியாக அதிமுகவுக்கு 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்பதால் அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை. இதனால், அதிமுக வாக்கு மறைமுகமாக அதிகளவில் பாமகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Similar News

News March 3, 2026

திமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட்

image

கூட்டணி முடிவை இன்றுக்குள் அறிவிக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. அப்படி அறிவிக்கவில்லை என்றால், இன்றே ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் 3-வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2026

மீண்டும் எம்பி ஆகிறாரா தம்பிதுரை?

image

அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்டுகளில் 2 இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்கும். இதில் ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு (அன்புமணி) கொடுக்கவும், மற்றொன்றில் தம்பிதுரையை களமிறக்கவும் EPS திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

image

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

error: Content is protected !!