News December 20, 2024
10 வருட மர்மத்துக்கு விடை கிடைக்குமா?

காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க உள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. 2014இல் 227 பயணிகளுடன் மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணி பல ஆண்டுகள் தொடர்ந்த நிலையில், விமானத்தை கண்டறியும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில், USA-வை சேர்ந்த ஓஷன் இன்ஃபினிடி என்ற நிறுவனம், இந்த பணியை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
தி.மலையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

தி.மலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
புதுகை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News March 13, 2026
அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள்

அதிமுகவில் ஜனநாயக சூழல் இருப்பதாலும், எளிய குடும்பத்தின் பின்னணியை கொண்ட தமிழன் (EPS) தலைமையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அதிமுகவில் இணைந்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்தும் தலைமை முடிவு செய்யும் எனக் கூறிய அவர், அதிமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு அல்ல; தனது மக்களின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.


