News September 26, 2025

சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிக்கப்படுமா?

image

ஆசியக் கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தானை வீழ்த்திய பின், அரசியல் தொடர்பான கருத்துகளை சூர்யகுமார் தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ICC-யிடம் புகார் அளித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நேற்று சூர்யாவிடம் விசாரணை நடத்தினார். இதில் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 26, 2025

தீபாவளிக்கு ₹2500-க்குள் துணி எடுக்கணுமா?

image

தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், ஜவுளிக்கடைகளில் இப்போதே கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. இந்நிலையில், ஆடைகளுக்கு ₹2500-க்கு மேல் பில் செய்தால் 18% gst, ₹2500-க்குள் இருந்தால் 5% gst வசூலிக்கப்படுகின்றது. அதனால், ₹6 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்கினாலும் கூட, பில்லை 3-ஆக பிரித்து (எ.கா. ₹2,500,₹,2000, ₹1,500) பணம் செலுத்த வேண்டும் என்ற தவறான தகவல் பரவி வருகிறது.

News September 26, 2025

தலைநகரில் செயற்கை மழை

image

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க அக். 7 முதல் 9-ம் தேதிக்கு இடையே செயற்கை மழை சோதனை நடைபெற உள்ளது. இதற்காக கான்பூர் ஐஐடி உடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்காக ₹3.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனைக்கு கிடைக்கும் பலனை வைத்து, அடுத்தடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு திட்டமிடப்படும் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

News September 26, 2025

அமைச்சரவையில் பங்கு கேட்பது உரிமை: K.S.அழகிரி

image

சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை. அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம் என கூறுவது வதந்தி என்று தெரிவித்தார். ராகுலுக்கு அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஸ்டாலின் சிறந்த நண்பர்; அவரிடம் எங்களின் உரிமையை கேட்கிறோம், அதில் எந்த தவறும் இல்லை என்றார்.

error: Content is protected !!