News March 25, 2024

வயநாட்டில் ராகுலை வீழ்த்துவாரா சுரேந்திரன்?

image

ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியின் வேட்பாளராக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டதாரியான இவர் கல்லூரி காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 2020இல் மாநில பாஜக தலைவரான அவர், துடிப்பு மிக்கவர் என்று பெயரெடுத்தவர். எனவே, ராகுலை வீழ்த்த இவரை மத்திய பாஜக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News October 25, 2025

டெல்லியில் NIGHT SHIFT-க்கு அனுமதி

image

டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேர பணியில் வேலை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் பெண்களுக்கான பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதி, கடைகளில் சிசிடிவி உட்பட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பணியிடங்களில் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கான வேலை நேரமும், ஊதியமும் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News October 25, 2025

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பா? இதை பண்ணுங்க

image

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பால் தண்ணீர் வரவில்லையா? இதை பண்ணுங்க.. *தண்ணீர் தொட்டியை முதலில் கழுவி சுத்தப்படுத்தவும். *தொட்டியில் இருந்து குழாய்களுக்கு செல்லும் பைப்களை மூடி, T வடிவ பெண்ட் வழியாக 10 லிட்டர் ஆசிட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். *24 மணி நேரத்திற்கு பைப்களில் ஆசிட் நன்கு ஊறட்டும். *இப்போது T பெண்ட் வழியாக தண்ணீரை விடவும். *உள்ளே அடைத்திருந்த உப்பு கரைந்து மொத்தமும் வெளிவரும்.

News October 25, 2025

கவர்ச்சி காட்ட தயாராகும் கயாது

image

‘டிராகன்’ படத்தின் மூலம் மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ள நடிகையாக வலம் வந்தார் கயாது லோஹர். ஆனால், பார்ட்டி சர்ச்சைகளால் அவரது மார்க்கெட் டல் ஆனது. அடுத்து நடிக்கும் படங்களும் தள்ளிப்போனது. இதனால், கவர்ச்சி காட்ட தயாராகி வருகிறாராம். முதற்கட்டமாக கிளாமர் போட்டோஷூட், வீடியோ ஷூட் ரிலீஸ் செய்ய போகிறாராம். டாப் ஹீரோக்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அவரது பிளானாம்.

error: Content is protected !!