News December 24, 2024
இட ஒதுக்கீடு தந்தால் திமுகவுக்கு ஆதரவு: அன்புமணி

வன்னியர் உள் ஒதுக்கீடு கொடுத்தால் வரும் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், இல்லையெனில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுகவுக்கு சமூக நீதி இல்லை எனவும் வன்னியர்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் சாடினார்.
Similar News
News September 7, 2025
நாளை பள்ளி ஆசிரியர்கள் தயாரா இருங்க!

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(செப்.8) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் trb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு நவம்பரில் நடைபெற உள்ளது. SHARE IT.
News September 7, 2025
CM ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பிளான்

ஜெர்மனி, இங்கிலாந்தில் முதலீடுகளை ஈர்க்க சென்ற CM ஸ்டாலின் முன்னிலையில், ₹15,516 கோடி தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து லண்டனில் இருந்து இன்று ஸ்டாலின் புறப்படுகிறார். நாளை காலை 7.30 மணிக்கு சென்னை திரும்பும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா வரை இந்த வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.
News September 7, 2025
சந்திர கிரகணம்: தம்பதியர் ஒன்று சேரலாமா?

சந்திர கிரகணத்துக்கு முன்பு 9 மணிநேரமும், கிரகணத்தின் போதும் பூமியின் சூழல் அசுத்தமாவதாக இந்துமத நம்பிக்கை கூறுகிறது. இந்நேரத்தில் பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், தம்பதியர் உறவில் ஈடுபடுவதையும் கிரகணம் முடியும்வரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், உறவில் ஈடுபடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.