News March 13, 2025
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் மின்னுமா?

குக்கிராமங்களில் கூட இணைய சேவையை வழங்க ஏர்டெலும், ஜியோவும் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவை ஒப்பந்தத்தை பெற்றுள்ளன. பக்கத்து நாடான பூட்டானில் ஸ்டார்லிங்கின் இணைய சேவை மாதம் ₹3,000க்கு கிடைக்கிறது. இந்தியாவில் ₹4,200க்கு கிடைக்கலாம். ஆனால், ஸ்டார்லிங்கை விட குறைவான விலையிலும், அதிவேகத்திலும் இங்குள்ள பைபர் பிராட்பேண்டிலேயே இணைய சேவை கிடைக்கிறது. ஸ்டார்லிங்க் மின்னுமா? உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 14, 2025
கிராமச் சாலைகளை மேம்படுத்த ₹2,200 கோடி

₹675 கோடி மதிப்பில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ₹400 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும். கிராமச் சாலைகளை மேம்பாட்டுக்காக ₹2,200 கோடியும், சென்னையில் சீராக குடிநீர் விநியோகித்திட சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ₹2,423 கோடியும் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
News March 14, 2025
சென்னை அருகே குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு ஆலை!

சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வரும் குப்பை தேக்கம் பிரச்னைக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சேகரிக்கப்படும் பல லட்சம் டன் திடக்கழிவு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பிரமாண்ட ஆலை, தாம்பரம் அருகே அமைக்கப்படவுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2025
மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்: அமைச்சர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ₹1000 பெற்று வருவதாகவும், நடப்பாண்டில் இத்திட்டத்திற்கு ₹13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.