News March 20, 2024
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?

மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, செந்தில் பாலாஜியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பலமுறை ஜாமின் கோரி மனு செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அங்கித் திவாரிக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை முன்வைத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோர வாய்ப்புள்ளது.
Similar News
News August 31, 2025
துலீப் டிராபியை ஒளிபரப்பாதது ஏன்? BCCI விளக்கம்

துலீப் டிராபி தொடரை ஒளிபரப்பாததற்கு ரசிகர்கள் மத்தியில் கண்டனம் எழுந்த நிலையில், BCCI மௌனம் கலைத்துள்ளது. வரும் செப்டம்பர் 11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் இறுதி போட்டி நிச்சயமாக ஒளிபரப்பப்படும் எனவும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமான போட்டிகளை ஒளிபரப்ப ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூர் போட்டிகளுக்கு BCCI அதிக முக்கியத்துவம் தருவதாகவும் கூறியுள்ளது.
News August 31, 2025
Parenting: குழந்தைக்கு வயிற்றில் புழு தொல்லையா? இதோ தீர்வு

வயிற்றில் புழு தொல்லை இருப்பதால் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லையா? எளிதில் கிடைக்கும் பொருள்களை வைத்து இதனை தீர்க்கலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாய்விடங்கம் 25 g, மிளகு 3-5 g எடுத்து, குப்பைமேனி சாறுடன் கலந்து, வெயிலில் வைக்கவும். சாறு வற்றியவுடன், அதை பொடிசெய்து, அரை டீஸ்பூன் எடுத்து, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 3 நாள்கள் கொடுக்கவும். SHARE IT.
News August 31, 2025
BREAKING: இன்று நள்ளிரவு முதல் உயருகிறது

➤விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, எலியார்பத்தி, வீரசோழபுரம், புதூர் பாண்டியாபுரம், நத்தக்கரை, அரவக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விஜயமங்கலம் உள்ளிட்ட <<17567611>>டோல்களின் கட்டணம்<<>> இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. ➤SBI-ல் Auto Debit முறை தோல்வியடைந்தால் 2% அபராதம். ➤LPG சிலிண்டர் விலை மாற்றம் குறித்து காலை (செப்.1) அறிவிக்கப்படும். ➤வெள்ளியிலும் ஹால்மார்க் முத்திரையிடுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. SHARE.