News April 25, 2025
பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாகா? அப்போ அவர்?

தன்னிடம் போதிய அதிகாரமும் இல்லை, தனது துறைக்கு நிதியும் இல்லை என பேரவையிலேயே பேசினார் அமைச்சர் பிடிஆர். இதனால் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, செந்தில் பாலாஜி வசம் உள்ள மின்சாரம், மதுவிலக்கு துறையை பிடிஆருக்கு கூடுதல் இலாகாவாக அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, <<16197163>>SC-ன்<<>> கிடுக்குப்பிடியால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 3, 2025
இலவச லேப்டாப் திட்டத்தில் குளறுபடி: நயினார்

தமிழகத்தில் பல லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், வெறும் ₹10 லட்சம் பேருக்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என கேட்ட அவர், பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள் எனவும் சாடியுள்ளார். தேர்தலுக்காக அதிமுகவின் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 3, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை.. 2-வது மாவட்டமாக அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, நாளை <<18461242>>சென்னையில்<<>> பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
News December 3, 2025
உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா.. எதில் தெரியுமா?

“பிரபலமான சுற்றுலா தளங்கள் 2026” தரவரிசை பட்டியலை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் டிராவல் நிறுவனம், உலகளாவிய முன்பதிவுகள் மற்றும் பயண ஆலோசகர்கள் தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மேலே, எந்தெந்த சுற்றுலா தளங்கள் டாப் 10-ல் உள்ளன என்று, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


