News April 6, 2025
நிர்மலாவுடன் சீமான் சந்திப்பா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமனை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது கூட்டணிக்கான அச்சாரமா? அல்லது அரசியல் ரீதியான காரணமா? என கேள்விகள் எழுந்திருக்கின்றன.
Similar News
News January 28, 2026
இனி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி எளிது: நயினார்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய மைல்கல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் 99% இந்தியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்படும். TN இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் ஆகியவை TN-லிருந்து ஏற்றுமதி செய்வது எளிதாகும் எனவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
ஜனவரி 28: வரலாற்றில் இன்று

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. 1933 – பாகிஸ்தான் என்ற பெயர் சௌத்ரி ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. 1865 – இந்திய சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த தினம். 1986 – நடிகை ஸ்ருதி ஹாசன் பிறந்த தினம். 1997- சிறுபான்மையின சமூக ஆர்வலர் பழனி பாபா நினைவு தினம்.
News January 28, 2026
காசாவில் மீட்கப்பட்ட கடைசி பணயக் கைதியின் உடல்!

காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி பணயக்கைதியின் உடலை இஸ்ரேல் பாதுகாப்பு படை மீட்டது. காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின், பணய கைதிகளை மீட்கும் பணி இஸ்ரேல் தீவிரம் காட்டி வந்தது. அதன்படி ஹமாஸால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இஸ்ரேலிய போலீஸ் சார்ஜென்ட் ரான் கவிலியின் உடல் 843 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இவர் 2023 அக்.7-ம் தேதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


