News December 13, 2024

மீண்டும் ஓபனிங் களமிறங்கும் ரோஹித்?

image

ஆஸி.க்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா ஓபனிங் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல், இன்று புதிய பந்தில் அவர் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்துள்ளது. 2ஆவது டெஸ்ட்டில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர், 2 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 9 ரன்களையே அடித்திருந்தார். அதன் காரணமாக, 3ஆவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 5, 2026

போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.

News March 5, 2026

விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

image

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

image

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது. இந்நிலையில், 2026 தேர்தல் பணிகளை CEC குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இறுதியாக, மேற்கு வங்கத்தில் மார்ச் 9 – 10-ல் நடைபெறுகிறது. இதனால் மார்ச் 10-க்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், குறிப்பாக மார்ச் 13-ல் தேர்தல் தேதி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!