News April 15, 2024

தோல்வியில் இருந்து பாடம் கற்குமா RCB

image

தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் RCB, இன்று SRH-ஐ எதிர்கொள்கிறது. SRH 250 ரன்கள் மேல் குவித்து, ஏற்கெனவே தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளது. ஆனால், RCB-யில் அப்படி இல்லை; கோலியை தவிர மற்ற வீரர்களின் ஆட்டம் மோசம்; குறிப்பாக பந்துவீச்சும் டெத் ஓவர்களில் சரியாக எடுபடவில்லை. இதையெல்லாம் சரி செய்தால் தான் இன்றைய போட்டியில் வெல்ல முடியும்.

Similar News

News November 21, 2025

புதுகைக்கு மாநில பாஜக தலைவர் வருகை

image

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டைக்கு 26ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, ஆயத்த கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

News November 21, 2025

BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

image

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.

News November 21, 2025

இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

image

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!