News April 4, 2024

வட்டியை குறைக்குமா ரிசர்வ் வங்கி?

image

மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஆண்டுக்கான கொள்கை முடிவுகளை ஆளுநர் சக்தி காந்த தாஸ் நாளை (05.04.2024) வெளியிடவிருக்கிறார். கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தன. தற்போது பணவீக்கம் சற்று குறைந்திருப்பதால் நாளை ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 31, 2025

தமிழ் பாடகி காலமானார்.. உருக்கமாக இரங்கல்

image

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பல நாட்டுப்புற பாடல்கள் பாடிய அவர், திரைத்துறையிலும் புகழ்பெற்றவராக இருந்தார். நமது சென்னை சங்கமம் கலைவிழாவிலும் பங்கேற்று பாடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆழ்த்த இரங்கல் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News December 31, 2025

பயங்கர வெடிபொருள்கள் பறிமுதல்.. புத்தாண்டில் சதி?

image

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், ராஜஸ்தானில் பயங்கர வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூரியா உரம் என்ற பெயரில் காரில் கடத்தி செல்லப்பட்ட 150 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 200 வெடிக்கும் பேட்டரிகள் மற்றும் 1,100 மீட்டர் வயரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

News December 31, 2025

2025-ன் கடைசி சூரிய அஸ்தமனம்!

image

புத்தாண்டு என்பதை தாண்டி 2025-ம் ஆண்டின் கடைசி நாள் பலரை உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. அந்த வகையில் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காண நாட்டின் கடற்கரைகள், மலை பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் முதலில் அருணாச்சலில் நடந்துள்ளது. அதேபோன்று இந்தியாவிலேயே இங்கு தான் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Bye Bye 2025!

error: Content is protected !!