News October 30, 2025
அரையிறுதியை அச்சுறுத்துமா மழை?

உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் நவி மும்பை மைதானத்தில் மாலை 3 மணி அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அது இரவில் வெறும் 4% ஆக குறையும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பாதிப்பு இருக்காது என்ற நிலையே உள்ளது. இன்று இந்திய அணி வெற்றி பெறுமா?
Similar News
News November 1, 2025
தங்கம் விலையில் அக்டோபரில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம்

கடந்த மாதம் 1-ம் தேதி சவரனுக்கு ₹240 விலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை மளமளவென உயர்ந்து கடைசி நாளான நேற்று சவரன் ₹90,400 என்ற நிலையில் முடிந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 7 நாள்களாக உயர்வு, சரிவு என மாற்றங்கள் இருந்ததால் நம்மூர் சந்தையிலும் சவரன் ₹97,600-ல் இருந்து ₹7,200 குறைந்தது. உலக சந்தையில் தற்போது விலை நிலையாக இருப்பதால் இன்று(நவ.1) பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மழை அலர்ட்!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நவ.6-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘மொன்தா’ புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.
News November 1, 2025
பெண்களே 30 வயது ஆச்சா? இத கண்டிப்பா செய்யணும்!

வேலைக்கு செல்லும் பெண்கள், குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. அதிலும் 30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தமான உண்மை. என்ன வேலை இருந்தாலும், ஆரோக்கியம் தான் முதலில் முக்கியம். எனவே 30 வயதானால் பெண்கள் எதையெல்லாம் முக்கியமாக செய்யணும் என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…


