News November 22, 2024
மக்களவையில் பிரியங்கா குரல் ஒலிக்குமா?

2019, 2024 தேர்தல்களில் வயநாட்டில் 2 முறை போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி வாகை சூடினார். ஆனால் 2024இல் ரேபரேலியிலும் வென்றதால் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுகிறார். இதில் பிரியங்கா வென்றால், மக்களவையில் ராகுல், பிரியங்கா குரல் கூட்டாக ஒலிக்கும். இத்தேர்தல் முடிவு நாளை வெளியாகவுள்ளது. முடிவை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்க.
Similar News
News November 16, 2025
6-9 வகுப்புகள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. *டிச.15- தமிழ், டிச.16-ஆங்கிலம், டிச.17-விருப்ப மொழி, டிச.18-கணிதம், டிச.19-உடற்கல்வி, டிச.22-அறிவியல், டிச.23-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையாகும்.
News November 16, 2025
பாலையாவை 3D-ல் பார்க்க ரெடியா?

இயக்குநர் போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா 2’ திரைப்படம் டிச.5-ல் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 22 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழுவின் இந்த அறிவிப்பால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், பனிமலையில் பாலையா சிவ தாண்டவம் ஆடும் காட்சிகளை 3D-ல் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
News November 16, 2025
BREAKING: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 – டிச.23 வரை தேர்வு நடைபெறும். 6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 – 23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிச. 24 முதல் ஜன.4 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாணவர்களே, தேர்வுக்கு தயாரா?


