News August 31, 2025
மணிப்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி?

PM மோடி வரும் செப்டம்பர் 2-ம் வாரத்தில் மணிப்பூருக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வெடித்த இனக்கலவரத்துக்கு பிறகு ஒருமுறை கூட PM அங்கு செல்லவில்லை என கண்டனங்கள் வலுத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் அவர் அங்கு செல்லவுள்ளார்.
Similar News
News September 1, 2025
கோலிவுட் ரசிகர்களே.. இந்த செப்டம்பர் செம ட்ரீட் தான்!

இந்த செப்டம்பரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்கள் ரீலிசுக்காக வரிசைக்கட்டி நிற்கின்றன.
★செப்டம்பர் 5: மதராஸி, BadGirl, Ghaati, காந்தி கண்ணாடி
★செப்டம்பர் 12: பாம்ப், குமார சம்பவம், மிராய்(தெலுங்கு)
★செப்டம்பர் 19:கிஸ், தண்டகாரண்யம், சக்தி திருமகன்
★செப்டம்பர் 25: OG(தெலுங்கு), பல்டி(மலையாளம்) இவற்றில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது?
News September 1, 2025
அன்புமணி மீது நடவடிக்கையா? செப்.3 வரை நீட்டிப்பு!

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை முடிவை வரும் 3-ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என அக்கட்சியின் MLA அருள் கூறியுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு 16 கேள்விகளை முன்வைத்து அனுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தது. சீலிடப்பட்ட கவரில் ஒழுங்கு நடவடிக்கை குழு தங்களது முடிவை ராமதாஸிடம் அளித்தனர். இதுகுறித்து நாளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாக குழு கூட்டமும் நடைபெறவுள்ளது.
News September 1, 2025
வைகோவுக்கு மல்லை சத்யா கடிதம்

வைகோவின் கடிதத்திற்கு மல்லை சத்யா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுத்துவிட்டு தற்காலிக நீக்கம், பொறுப்பு நீக்கம் என இரு முரண்பாடான கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், துரை வைகோவை பொறுப்புக்கு கொண்டு வந்ததை வைகோ ஆதரித்ததாகவும், பல வழக்குகளில் வைகோவுக்கு துணை நின்ற தனக்கு துரோகி பட்டமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?