News April 11, 2025
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கமா?

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்வது குறித்து கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.<<16061152>> பொன்முடியின் பேச்சு<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சைவம், வைணவம், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 15, 2025
தினமும் தயிர் சாப்பிடலாமா?

சிலர் எல்லா பருவத்திலும் தினமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பர். அது சரியா என கேட்டால், மிகவும் சரியான விஷயம் என்கின்றனர் டாக்டர்கள். தினமும் அளவோடு தயிர் சாப்பிட்டால் *ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *உடல் எடையை குறைக்க உதவுகிறது *எலும்பின் உறுதி தன்மையை அதிகரிக்கும் *தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் *சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
News November 15, 2025
திருட்டு ஓட்டு போட நினைக்கிறது திமுக: தங்கமணி

இறந்த வாக்காளர்களை, SIR மூலம் நீக்க வேண்டாமா என தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். இறந்த வாக்காளர் பெயரில் திமுக திருட்டு ஓட்டு போட பார்க்கிறார்கள் எனவும் அதனால்தான் இவ்விவகாரத்தில் அதிமுகவை திட்டுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குமாரபாளையம் தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லை என்ற அவர், இதை பயன்படுத்தி திமுக வெற்றிபெற திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News November 15, 2025
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (நவ.16) மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.


