News April 29, 2025
பார்லிமெண்ட் கூடுமா?.. PM மோடிக்கு கார்கே கடிதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தி PM மோடிக்கு காங். தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒற்றுமை அவசியமான இந்த நேரத்தில், நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவது முக்கியம் என எதிர்க்கட்சிகள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப கூட்டத்தொடர் கூட்டப்படும் என நம்புவதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளி திங்களன்று(அக்.20) வருவதால், அடுத்த மாதம் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், அக்.21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் லீவு கொடுத்து, அதனை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும். இம்முறையும் அப்படி செய்தால் பள்ளி மாணவர்களுக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை வரும். இதுகுறித்து அரசு விரைவில் தெரிவிக்கவுள்ளது.
News September 14, 2025
PAK வீரரின் உருவ பொம்மையை எரித்த ஆம் ஆத்மியினர்

ஆசிய கோப்பை தொடரில், இன்று IND – PAK அணிகள் மோதுகின்றன. இதற்கு உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாக்., வீரர் ஃபஹீம் அஷ்ரப்பின் உருவ பொம்மையை, டெல்லி ஆம் ஆத்மி தலைவர் செளரப் பரத்வாஜ் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலின்போது பாரதமாதாவை அவதூறாக சித்தரித்த பதிவை அஷ்ரப் வெளியிட்டிருந்தார்.
News September 14, 2025
புகழ் எல்லாம் கொஞ்ச காலம் தான்: சமந்தா

ஒரு நடிகைக்கு, புகழ், ரசிகர் பட்டாளம் என்பது கொஞ்ச காலம் மட்டுமே என சமந்தா தெரிவித்துள்ளார். நடிகையின் வாழ்க்கை நீண்டது அல்ல என்ற அவர், இதை உணர்ந்துகொள்வது தனது வாழ்வில் மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மயோடிசிஸ் நோயிலிருந்து மீண்டு வந்தது, நாக சைதன்யாவுடனான பிரிவு என சில காலம் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வாழ்க்கை முறை குறித்து பேசி வருகிறார்.