News August 5, 2024
அரசியலுக்கு வரமாட்டேன் : ஆண்ட்ரியா

கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தான் ஆசைப்பட்ட த்ரில்லர், ஹாரர், காதல், அட்வென்ச்சர் உள்ளிட்ட அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டதாகவும், வரலாற்றுக்கதைகளில் நடிக்கும் ஆசை இல்லை என்றும் கூறினார். மேலும், ‘வடசென்னை 2’ படம் உருவானால், கண்டிப்பாக சந்திரா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
Similar News
News January 17, 2026
ஆத்தூர் கூலமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு திருவிழா!

ஆத்தூர்: கூலமேடு ஊராட்சியில் நாளை பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 600 காளைகளும், 500 வீரர்களும் பங்கேற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமுமின்றி போட்டியை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News January 17, 2026
மீண்டும் இணையும் ‘சூதுகவ்வும்’ காம்போ!

‘சூதுகவ்வும்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், ‘கை நீளம்’ என்ற புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளதாக நலன் குமாரசாமி தெரிவித்துள்ளார். ‘சூதுகவ்வும் 2-ம் பாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த கதையில், சரியான கிளைமாக்ஸ் அமையாததால் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 17, 2026
வாடிவாசலுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க, CM ஸ்டாலின் மதுரை, அலங்காநல்லூருக்கு விரைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 1,100 காளைகளுக்கும், அவற்றை அடக்க 600 காளையர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ₹20 லட்சம் மதிப்பிலான காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு ஒரு டிராக்டரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.


